World

புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 19 பேர் உயிரிழப்பு!

 

துனிசியாவில் குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில் 19 பேர் உயிரிழந்தனர்.

படகில் இருந்த 05 குடியேற்றவாசிகளை மீட்கும் பணியில் துனிசிய கடலோர காவல்படை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற கப்பல் இத்தாலி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

கடந்த சில நாட்களில் துனிசியாவிற்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருடன் சென்ற படகுகள் விபத்துக்குள்ளானதில் 67 பேர் உயிரிழந்துள்ளதுடன் 09 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading