World

புளோரிடாவில் 12 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 12 பேர் பலி!

புளோரிடாவில் கட்டடம் இடிந்த பகுதியில் ஆறாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுவரும் தேடல் மற்றும் மீட்பு முயற்சியின்படி இதுவரை 12 பேர் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி ,அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான தற்செயலான கட்டமைப்பு தோல்வி என மதிப்பிடக்கூடிய பேரழிவின் காரணமாக 149 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

40 ஆண்டுகள் பழமையான அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே உள்ள 12 மாடி குடியிருப்பு கட்டிடம் கடந்த வியாழக்கிழமை திடீரென இடிந்து வீழ்ந்தது.

அதற்கு ,கட்டமைப்பு குறைபாடுகளே காரணம் என பொறியியலாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ,கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிற நிலையில் தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading