Features

பூமி வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தகவல்!

தற்போது பூமி வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வேகமாக சுழன்று கொண்டிருக்கின்றது. அதாவது சுழலும் வேகத்தில் ஒரு வினாடி மாறுபாடு இருப்பதை விஞ்ஞானிகள் அணிக்கடிகாரத்தின் வாயிலாக கண்டுபிடித்துள்ளனர். 

 இதுகுறித்து இங்கிலாந்தின் தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் விஞ்ஞானி பீட்டர் வைபர்லி கூறுவதாவது, 

 விஞ்ஞானிகளால், 1972 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் ஒருமுறை லீப் விநாடிகள் சேர்க்கப்பட்டு, பூமியின் சுழற்சியில் உள்ள வினாடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அணுக் கடிகாரத்தை வைத்திருக்கின்றனர். 

பூமியின் சுழற்சி வேகம் மேலும் அதிகரித்தால், நாம் ஒரு வினாடியைக் குறைக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார். 

மேலும் பூமியின் மையப்பகுதி, பெருங்கடல்கள், வளிமண்டலத்தின் இயக்கம் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசை ஆகிய பல்வேறு காரணங்களால் பூமியின் சுழலும் வேகத்தில் மாற்றம் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading