Local

பூரண குணமடைந்த அஜித் ரோஹண இன்று வீடு திரும்புகிறார்!

கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண பூரண குணமடைந்துள்ளார்.

சற்று முன்னர் தான் தற்போது பூரணமாக குணமடைந்துள்ளதாக தெரிவித்த அவர்
இன்னும் சற்றுநேரத்தில் வைத்தியசாலையிலிருந்து வெளியேறி வீடுசெல்லவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

அத்துடன் தான் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தருணத்திலிருந்து விரைவாக குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி கூறுவதாக தெரிவித்துள்ளார்

மேலும் போலி புகைப்படங்களைப் பயன்படுத்தி, தான் வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக சமூகவலைதளங்களில் பிரசாரம் செய்தவர்கள் தொடர்பில் கவலையடைவதாகவும் அவர் கூறியுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading