CinemaLocal

பெண்கள் உடலை மறைப்பது நல்லது நடிகர் சல்மான்கான் தெரிவிப்பு!

பெண்கள் எந்த அளவிற்கு உடலை மறைக்கிறார்களோ அவ்வளவு நல்லது”
– சல்மான்கான்.

பெண்களின் உடல் மிகவும் மதிப்புமிக்கது என்று நான் நினைக்கிறேன். எனவே அவர்கள் எந்த அளவிற்கு அதனை மறைக்கிறார்களோ அவ்வளவு நல்லது” என பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு சல்மான் கான் அளித்த பேட்டியில், “நீங்கள் ஒரு கண்ணியமான படத்தை எடுத்தால், எல்லோரும் அதை குடும்பத்துடன் பார்க்கச் செல்கிறார்கள். பெண்களின் உடல் மிகவும் மதிப்புமிக்கது என்று நான் நினைக்கிறேன்.

எனவே அவர்கள் எந்த அளவிற்கு அதனை மறைக்கிறார்களோ அவ்வளவு நல்லது. இங்கே பிரச்சினை ஆண்களிடம் தான் உள்ளதே தவிர, பெண்களிடமில்லை. மற்றவர்களின் தங்கை, தாய், மனைவியை ஆண்கள் பார்க்கும் விதம் எனக்கு சுத்தமாக பிடிக்காது. நான் படம் இயக்கினால் பெண்களை ஆண்கள் வெறித்து நோக்கும் காட்சிகளை வைக்கமாட்டேன்” என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading