World

பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவருடன் காதலி செல்ல தடையில்லை!

பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய காதலனுடன் காதலி செல்ல எந்த தடையும் இல்லை என்று வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த லாவண்யா என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆணாக மாறி கவின் தமிழ் என்று தனது பெயரை மாற்றியுள்ளார்.கடந்த 2018ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் கடலாரியைச் சேர்ந்த ரேவதி என்பவருக்கும் கவின் தமிழுக்கும் காதல் ஏற்பட்டது. இதனை அறிந்த ரேவதியின் பெற்றோர் அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரேவதியை கண்டுபிடித்து தரக் கோரி கவின் தமிழ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் நிஷா பானு ஆகிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த 3 ஆண்டுகளாக மனுதாரர் பெண்ணாக இருந்து ஆணாக மாறியது தெரிந்தே பழகியதாக ரேவதி கூறியுள்ளார்.மேலும் அவருடன் வாழவே விரும்புவதாகவும் ரேவதி தெரிவித்துள்ளார்.இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ரேவதியின் விருப்பப்படி கவின் தமிழுடன் செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டனர்….

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading