Gossip

பென்சிலை திருடியதாக பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்த மாணவன்!

பென்சில் திருடியதாக கூறி சக மாணவன் மீது புகார் கொடுக்க மாணவன் ஒருவன் பொலீஸை நாடியுள்ளார்.

ஆந்திர பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் காவல் நிலையத்துக்கு சென்ற ஆரம்பப் பள்ளி மாணவன், சக மாணவன் தனது பென்சிலை திருடிவிட்டதாக கூறியுள்ளார். இதனால் சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சக மாணவன் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு ஆரம்ப பள்ளி மாணவன் கோரியது போலீசாருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்தால் பின்னர் ஜாமீன் கிடைப்பது கடினம் என்று கூறி மாணவனை சமரசம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading