World

பெற்றோர் உட்பட 4 பேரை கொலை செய்த மாணவன் வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல்!

தாய், தந்தை, பாட்டி, தங்கை ஆகியோரை துடிதுடிக்க கொலை செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹரியானா மாநிலத்தில் ரோகித் நகரில் வசித்து வந்தவர் பிரதீப் மாலிக்(45). இவரது மனைவி சந்தோஷ் பப்லி(40). மகள் நேகா(19). தாயார் ரோஷ்ணிதேவி இவரது மகன் அபிஷேக் மாலிக்(20).

மகனுக்கும், பிரதீப்பிற்கும் தகராறு ஏற்படவே வீட்டைவிட்டு வெளியேறி தனியாக வசித்து கல்லூரியில் படித்து வந்துள்ளான் அபிஷேக்.இந்நிலையில் கடந்த 27ம் திகதி இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் தந்தை என்றும் பாராமல் அபிஷேக் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனைத் தடுக்க வந்த பாட்டி, அம்மா, தங்கை என அனைவரையும் கண்மூடித்தனமாக சுட்டுவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளான்.

சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வந்து, 4 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த் நிலையில், சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தில் அனைவரும் இறந்துவிட்ட நிலையில், அபிஷேக் மட்டும் எவ்வாறு தப்பித்தார் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்ட போது, அபிஷேக் பொலிசாரிடம் தான் தான் கொலை செய்துள்ளதாக உண்மையைக் கூறியுள்ளார்.

தந்தைக்கும் தனக்கும் ஏற்பட்டதில் பிரச்சினையாய் வெளியில் தங்கியிருந்து படித்து வருவதாகவும் அதில் ஏற்பட்ட பிரச்சினையால் தான் குடும்பத்தினரை சுட்டுக் கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

ஆனால் குடும்பத்தையே சுட்டுக் கொலை செய்யும் அளவிற்கு இதுதான் காரணமா? வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்று அபிஷேக் மாலிக்கிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading