Local

பெற்றோர் எதிர்ப்பால் நஞ்சருந்திய காதலி பலி காதலன் வைத்தியசாலையில் அனுமதி!

திம்புலபத்தனை பொலிஸ் பிரிவில் உள்ள ஸ்டோனிகிளிப் பகுதியிலுள்ள விடுதியொன்றில் காதல் ஜோடியொன்று நஞ்சு அருந்தியுள்ளது. இதில் யுவதி உயிரிழந்துள்ளார். இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திம்புலபத்தனை பொலிஸ் பிரிவில் உள்ள ஸ்டோனிகிளிப் பகுதியிலுள்ள விடுதியொன்றில் காதல் ஜோடியொன்று நஞ்சு அருந்தியுள்ளது. இதில் யுவதி உயிரிழந்துள்ளார். இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 16ஆம் திகதி இந்த சம்பவம் நடந்தது.

உயிரிழந்தவர் யுனிபீல்ட் தோட்டத்தைச் சேர்ந்த கார்த்திகா (17) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த யுவதியும் இளைஞனும் காதலர்கள். அவர்கள் திருமணம் செய்ய இரு தரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால், 15 நாட்களாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த உல்லாச விடுதிக்குள் நுழைந்து, ஒரே நேரத்தில் நஞ்சு அருந்தியுள்ளனர்.

நஞ்சு அருந்துவதற்கு முன்பாக, இளைஞன் தனது நண்பர் ஒருவருக்கு தொலைபேசியில் தகவல் வழங்கியுள்ளார். அந்த நண்பர், திம்புலபத்தனை பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

16ஆம் திகதி இரவு பொலிசார் அந்த விடுதிக்கு சென்று பார்த்த போது, யுவதி உயிரிழந்திருந்தார். இளைஞன் குற்றுயிராக காணப்பட்டார்.

இளைஞன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இரு தரப்பு உறவுகளும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், விசம் அருந்தும் விபரீத முடிவை எடுத்ததாக இளைஞன் வாக்குமூலமளித்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading