Cinema

டாக்டரிடம் பின்வாங்கியது அண்ணாத்த திரைப்படம்!

ரஜினிகாந்தின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் அண்ணாத்த. அதே போல் கடந்த மாதம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான படம் டாக்டர்.

சிவகார்த்திகேயனின் எந்த படத்திலும் இல்லாத அளவிற்கு, டாக்டர் திரைப்படம் ரூ. 100 கோடியை வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து கடந்த தீபாவளிக்கு வெளியான ரஜினியின் அண்ணாத்த படம் தற்போது வரை வசூலில் வேட்டையாடி வருகிறது.

ஆனால் திருச்சி ஏரியாவில் மட்டும் இதனை செய்ய அண்ணாத்த திரைப்படம் தவறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, திருச்சி ஏரியாவில் டாக்டர் படம் செய்த வசூலை விட, அண்ணாத்த படம் குறைவாக வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம் தெரிவிக்கின்றது.

அதே நேரத்தில் தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட ஏரியாக்களில் அண்ணாத்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது என்று அந்தந்த ஏரியா திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading