Cinema

பொங்கலுக்கு வெளியாகும் ரஜினியின் லால் சலாம்

சூப்பர் ஸ்டார் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் லால் சலாம் படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

லால் சலாம் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தற்போது லால் சலாம் படம் பொங்களுக்கு வெளியாக உள்ளதாக புதிய போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading