Local

பொதுத் தேர்தலில் பதுளையில் களமிறங்கும் யோஷித ராஜபக்ஷ

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ பதுளை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பொதுத்தேர்தலில் போட்டியிட பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பதுளை மாவட்டத்தில் பின்தள்ளப்பட்டுள்ள நிலைக்கு முகம்கொடுத்துள்ளதுடன் அதற்கான முதன்மை காரணமாக இருப்பது முதலில் இருந்தே அந்த கட்சிக்காக பதுளையில் ஒழுங்கமைப்புக்களை மேற்கொண்ட குமார வெல்கம ஜனாதிபதி தேர்தல் நேரத்தில் கட்சியில் இருந்து நீங்கி சென்றமையே. அவரின் வெற்றிடத்தை நிரப்ப நியமிக்கப்பட்ட தேனுக விதான கமகே வெற்றி பெறவில்லை.

இதற்கிடையில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடவுள்ள பிரதான இரண்டு முக்கிய கதாபாத்திரங்களாவது இறுதி நேரத்தில் மொட்டின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்ட டிலான் பெரேரா மற்றும் மொட்டின் உறுப்பினர் அல்லாத ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் துணைத்தலைவர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரே. இவர்கள் இருவரும் பொதுவாக மக்களிடம் அதிகளிவில் மதிப்பிழந்துள்ள நிலையில்  மாவட்டத்தை விட்டு தொகுதியை கூட காப்பாற்றிக்கொள்ள இயலாத நிலையில் இருக்கிறார்கள்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading