Cinema

பொன்னியின் செல்வனை முடக்கிய ஊரடங்குச் சட்டம்!

எத்தனையோ பேர் எடுக்க முயற்சித்து தோல்வியுற்ற ‘பொன்னியின் செல்வன்’ படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார்.இந்திய சினிமாவின் முக்கியமான கலைஞர்கள் பங்கு பெறும் இப்படத்தை தமிழ் சினிமாவின் கவுரவமாகவே இண்டஸ்ட்ரி கருதுகிறது.முதல் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் வெற்றிகரமாக முடிந்தது.
இந்நிலையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் கொரோனா, ஒட்டுமொத்தமாக சினிமா இண்டஸ்ட்ரியையே முடக்கிப் போட்டிருக்கிறது.பெரும் முதலீடு போடப்பட்டிருப்பதால் விரைவில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தை முடிக்க மணிரத்னம் நினைக்கிறார். ஜூலை மாதம் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடத்தலாம் என்று தன் குழுவினரோடு பேசி முடிவெடுத்திருக்கிறார்.

ஒருவேளை அதுவரை கொரோனா பிரச்சினை நீடித்தால், வெளிப்புறப் படப்பிடிப்பு சாத்தியமாகாது. எனவே, ஏ.வி.எம்.மில் செட் போட்டு படம் பிடிக்கலாமா என்று மாற்று யோசனையையும் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading