Cinema

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக 579 கோடி ரூபாய் செலவு செய்த லைகா!

கடந்த வாரம் திரைக்கு வந்த பொன்னியன் செல்வதற்கு பல்வேறு வரவேற்பு எதிர்ப்பு மற்றும் சர்ச்சைக்கு பின்னரும் வெற்றிகரமாக திரையறங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன் நாவலை, இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக இயக்கி இருக்கிறார்.

முதல் பாகம், தமிழ், இந்தி உட்பட 5 மொழிகளில் கடந்த 30-ம் திகதி வெளியானது. இதில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடித்துள்ளனர்.

லைகா தயாரித்துள்ள இந்தப் படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது. முதல் வாரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 325 கோடி இந்திய ரூபாவை வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் மாத்திரம் இதுவரை 130 ரூபாவை கோடியை வசூலித்துள்ளது.

இதனால், இதன் அடுத்தப் பாகத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அதற்கான வேலைகளை படக்குழுத் தொடங்கி இருக்கிறது. கிராபிக்ஸ் பணிகளுக்கு மட்டும் 6 மாதம் ஆகும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்திற்காக லைகா தயாரிப்பு நிறுவனம் 5,79 கோடி இந்திய ரூபாயை செலவிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதற்மைய 2 வாரங்களில் செலவிட்ட பணத்தை லைகா நிறுவனம் கைப்பற்றபடும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading