Gossip

பொம்மையுடன் டேட்டிங் செய்யும் வாலிபர்!

ஹாங்காங்கில் வசித்து வரும் 36 வயதான ஷி தியான்ராங், பொம்மையுடன் டேட்டிங் செய்து வருகிறார். அந்த பொம்மைகளுக்கு ஐ போன் 12 உள்ளிட்ட விலையுயர்ந்த பரிசுகளையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

பொம்மையின் உடல் பகுதிகள் சேதமடைந்துவிடக் கூடாது என்பதற்காக தனக்குத் தானே சில நெறிமுறைகளை வகுத்துக்கொண்டு தியான்ராங் அந்த பொம்மையுடன் வாழ்ந்து வருகிறார்.மோச்சி (Mochi) எனப் பெயரிடப் பட்டுள்ள அந்த பொம்மையுடன் ஷி தியான்ராங் நாள்தோறும் படுத்து உறங்குகிறார். அந்த பொம்மையைக் குளிப்பாட்டி, வெறும் உடம்புக்கு பவுடர் பூசி, அழகான உடைகளையும் அணிவித்து விடுகிறார்.
10 ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்காங் கடை ஒன்றில் பொம்மை ஒன்றை பார்த்தபோது, தனக்கு பொம்மைகள் மீது ஈர்ப்பு இருப்பதை அவர் தெரிந்துகொண்டார். அந்த பொம்மையின் விலை இந்திய மதிப்பில் ரூ.9 லட்சமாக இருந்ததால் அதனை அவர் வாங்கவில்லை.
பின்னர், 2019ம் ஆண்டு இணையம் வழியாக மோச்சி பொம்மையை 10 ஆயிரம் யுவானுக்கு வாங்கியுள்ளார். அதிலிருந்து இப்போது வரை அந்த பொம்மையுடனே தன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

தியான்ராங்குக்கு உண்மையான பெண்களுடன் காதல் இருந்திருக்கிறது. ஆனால், அவர்கள் அனைவரும் தங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய மட்டுமே இவருடன் பழகியிருக்கிறார்கள். தவிர செல்போனில் மட்டுமே அதிகநேரம் இவருடன் உரையாடியுள்ளனர்.எனவேதான் பொம்மையை காதலிக்கத் தொடங்கி அதனுடன் வாழ ஆரம்பித்திருக்கிறார்!இப்பொழுது தியான்ராங், சந்தோஷமாக இருக்கிறாராம். பொம்மை மோச்சி தன் முழுகவனத்தையும்
இவரிடம் மட்டுமே செலுத்துகிறதாம்!

பொம்மையுடன் ஆண் ஒருவர் டேட்டிங் செய்வது இது முதன்முறையல்ல. கடந்த நவம்பரில் கஜகஸ்தான் (Kazakhstan) நாட்டைச் சேர்ந்த பாடிபில்டர் ஒருவர் ஆபாச பொம்மையுடன் 8 மாதம் டேட்டிங் செய்து அதனை திருமணம் செய்து கொண்டுள்ளார்!மார்கோ (Margo) எனப் பெயரிட்ட அந்த பொம்மையை, தான் திருமணம் செய்துகொண்ட வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறார்.

உண்மையில் இத்திருமணம் முன்பே நடந்திருக்க வேண்டியது. கொரோனா காரணமாக தள்ளிப் போய் கடந்த நவம்பரில்தான் மேரேஜ் நடந்திருக்கிறது.இந்த சம்பவமும் ஒருவகையில் தியான்ராங்குக்கு இன்ஸ்பிரேஷனாம்!

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading