Local

பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் குண்டை வைப்பதற்கு 50 ஆயிரம் ரூபா பணம்!

பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டினை வைப்பதற்காக நபர் ஒருவருக்கு வழங்கப்பட்டமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைக்குண்டினை கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் வைத்தார் என்ற சந்தேகத்தில் முக்கிய சந்தேகநபர் ஒருவர் எம்பிலிட்டியவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அரசபுலனாய்வு பிரிவினரின் விசாரணையின் போது அவர் கைதுசெய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைக்குண்டினை வைப்பதற்கு 50,000 ரூபாய் சந்தேகநபருக்கு வழங்கப்பட்டமை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
கைக்குண்டினை வைக்குமாறு கேட்டுக்கொண்ட நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுகின்றன இந்த சம்பவம் தொடர்பில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading