Sports

போட்டியில் தோல்வி வெளியேறிய பாகிஸ்தான் வெற்றி பெற்றது எப்படி?

போட்டி தோல்வியில் முடிவடைந்துவிட்டது என்று கைகுலுக்கிவிட்டு வெளியேறியது Pakistan !இந்தப் போட்டியில்.
ஆனால் போட்டி யாரும் எதிர்பாராத அதிசயமாக முடிந்த இடத்தில் தொடங்குகிறது.
மீண்டும் தொடர்ந்தது.

அந்த போட்டியை தோற்று வெளியேறியதாக இருந்த அணி, அபாரமாக வென்று முடிக்கிறது.

இவ்வாறான ஆட்டங்கள் எப்போதும் பார்ப்பதற்கு கிடைப்பதில்லை.

கடந்த போட்டியிலே இலங்கையணி மிகவும் இமாலய இலக்கை துரத்தி வெற்றி பெற்றது. அதாவது உலகின் இரண்டாவது அதிகூடிய இலக்கை துரத்தித் தீர்த்தது.

அதே இங்கிலாந்துக்கெதிராக இந்த போட்டி சிறிய 242 எனும் இலக்காயினும் அதைக்கூட 100 ஓட்டங்களால் தோற்கப்பார்த்தார்கள் பாபர்வாசிகள்.

இறுதி விக்கட் இணைப்பாட்டம்! அஞ்த போட்டியை விறுவிறுப்பாக்கிவிடுகிறது. சதாப் 97 , வெற்றிக்கு 21 தேவை. பந்து புல்டொசாக காலில் படுகிறது. நேரடியாக விக்கட்டை துளைக்கும் புள்ளி.

சதாப் தான் ஆட்டமிழந்ததாக வெளியேறுகிறார். ஏனோதானோ என ரிவீவ் கொடுக்கிறார். தன்னை தானே கடிந்து கொழ்கிறார். அனைவரும் சதாபை பாராட்டுகிறார்கள்.

இங்கிலாந்து 20 ஓட்டங்களால் வென்றதாக அறிவிக்கப்படுகிறது.

ஆனால் யாரும் இந்த திருப்பத்தை நம்பவில்லை. யாரும் எதிர்பாராததாக பந்து அவரது துடுப்பில் உரசியபின்பே காலில்பட்டதை TV நடுவரது ரிப்ளை காட்டுகிறது . எனவே அது ஆட்டமிழப்பல்ல என அறிவிக்கப்படுகிறது.

மீண்டும் வந்து நின்று சதாப் அந்த போட்டியை வென்றுவிடுகிறார் இறுதி விக்கட்டுக்காக வந்திணைந்த ஹரீஸ் ரவூபுடன் 89 ஒட்டங்கள். சதாப் 113(96).

சதாபின் முதல் சதம்! அதிசயம்!

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading