போதையில் குதிரைக்கு முத்தம் கொடுத்த இளைஞருக்கு ஏற்பட்ட விபரீதம்!

ரஷ்யாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் பார் ஒன்றில் குடித்துவிட்டு போதையில் தள்ளாடி வெளியே வந்துள்ளார்.
அப்போது, அந்த பகுதியில் குதிரை சவாரியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு பெண்களிடம் தகராறு செய்துள்ளார்.
அதன் பின்னர் இரவு நேரத்தில் குதிரையில் வந்துகொண்டிருந்த பெண் ஒருவரை மறித்து, அந்த பெண்ணிடம் அவர் தகராறு செய்துள்ளார்.
இதனால், அந்த பெண் சற்று சுதாரிக்கவே, அந்த பெண் ஓட்டிவந்த குதிரையிடம் வம்பு செய்ய முயன்றுள்ளார் வாசிலி.
மேலும், குதிரையின் முகத்தின் முன் நின்றுகொண்டு அதற்கு பலமுறை முத்தம் கொடுக்க முயற்சித்துள்ளார். அந்த பெண் எவ்வளவோ கூறியும் வாசிலி கேட்பதாக இல்லை.
ஒருகட்டத்தில் குதிரைக்கு அவர் முத்தம் கொடுக்க முயன்றபோது அந்த குதிரை அவரின் மூக்கை பலமாக கடித்துள்ளது.
இதனால், வலியால் அலறிய வாசிலியை மீட்டு அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக குதிரை அவரின் குருத்தெலும்பை கடிக்காததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருந்தாலும், வாசிலியின் மூக்கு பிய்ந்து தொங்கிய நிலையில் இருந்ததை அடுத்து மருத்துவர்கள் கிழிந்த பகுதியை ஒன்றாக சேர்த்து தையல் போட்டுள்ளனர். அவரின் அந்த தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
