World

போப் பிரான்சிஸ் ஆன்டகைக்கு கொரோனா வைரஸ்?

கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, இடையில் அவ்வப்போது தொடர்ந்து இருமினார்.
இதனால் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்ப்ட்டது. அதே போன்று வாத்திகானின் விழா ஒன்றில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என்று பாப்பரசர் பிரான்சிஸ் அறிவித்தார்.
இத்தாலி கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2,00க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 52 பேர் இதற்கு பலியாகியுள்ளனர்.
உடல்நிலை சரியில்லாமல் போனதில் இருந்து பாப்பரசர் சுறு சுறுப்பாக இல்லை என்று செய்திகள் வெளியானது.
அவர் கலந்து கொண்ட கூட்டத்தில், அங்கிருப்பவர்கள் அவரின் கையை தொடுவது, கை குலுக்குவது, ஒரு சிலர் முத்தமிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், அவரை அறியாமல் இந்த நோயை கொண்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவியது.
இந்நிலையில் தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பும் இல்லை எனவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக இத்தாலி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
83 வயதான ரோமன் கத்தோலிக்க தலைவர், நுரையீரலின் ஒரு பகுதியை பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நோய் காரணமாக அகற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading