Local

போராட்டத்தில் இணைந்து கொண்டார் சனத் ஜயசூரிய!

காலிமுகத்திடலில் தொடர்ந்தும் 7வது நாளாகவும் இடம்பெற்றுவரும் ஆளும் அரசாங்கத்திற்கு எதிரான தன்ணெழிச்சி மக்கள் போராட்டத்திற்கு தினமும் மக்கள் ஆதரவு கிடைத்துவரும் நிலையில் இன்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பிரபலங்கள் இணைந்து கொண்டு தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

பிரபல கிரிக்கட் வீரர் சனத் ஜயசூரிய அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (15) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

மறுமுனையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கினார்.

இவருக்கு ஆதரவு தெரிவித்து 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இலங்கை கேப்டன் அர்ஜுன ரணதுங்கவும் பகலில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading