Local

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளம் ஆசிரியை உயிரிழப்பு!

அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளம் ஆசிரியை உயிரிழந்துள்ளார்.

தெனியாய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட, ஆசிரியை ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த ஆசிரியை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளாா்.

உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும், அதற்கு முன்னரே அவர் உயிரிழந்துள்ளாா். 28 வயதுடைய ஆசிரியை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளாா்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாாினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading