World

போரை நிறுத்துங்கள் உங்களோடு ஓர் இரவு இருக்கிறேன் புடினிடம் கெஞ்சிய பிரபல ஆபாச நடிகை!

ரஷ்யா உக்ரைன் போர் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்த போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன. மேலும், அமெரிக்கா ,பிரிட்டன் போன்ற நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார நடவடிக்கையினை எடுத்துள்ளன.

ஆனாலும், போரை தொடர்ந்து வருகிறது ரஷ்யா. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின் போரை நிறுத்தினால் அவருடன் ஓர் இரவைக் கழிக்க தயார் எனக் கூறி பிரபல ஆபாச நடிகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இத்தாலியின் முன்னாள் ஆபாச நடிகை சியோலினா, இவர் பல வருடங்களாக ஆபாசப் படங்களில் நடித்து வந்தார்.

பின்னர் அதிலிருந்து விலகி தற்போது இத்தாலி அரசியலில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். அதே போல் சமூகவலைத்தளங்களிலும் பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகிறார்.

இந்த நிலையில் சியோலினா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ரஷ்ய அதிபர் புதின் போரை நிறுத்தினால், அதற்கு ஈடாக அவருடன் ஒரு இரவை செலவிட தயாராக இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சியோலினா இவ்வாறு கூறுவது முதன்முறை அல்ல சில வருடங்களுக்கு முன்பு வளைகுடாப் போர் தொடங்கிய போது அப்போதைய ஈராக் அதிபர் சதாம் உசேனிடமும் இதே வாய்ப்பை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா உக்ரைன் இடையே போர் தற்போது வரை முடிவுக்கு வரவில்லை, உக்ரைன் ரஷ்யா இடையே சமாதான பேச்சுகள் நடந்ததாகக் கூறப்பட்டாலும் தற்போது வரை போர் முடிவுக்கு வரவில்லை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading