Local

போலி தலதா மாளிகையின் பத்திரிப்பு பகுதி அகற்றம்!

குருநாகல் பொத்துஹெரவில் கட்டப்பட்டதாக கூறப்படும் போலி தலதா மாளிகையின் பத்திரிப்பு பகுதியை அகற்றும் பணி இன்று (08) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை அகற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த போலி தலதா மாளிகை தொடர்பில் சர்ச்சைக்குரிய சூழ்நிலை உருவாகியிருந்ததுடன், இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு அஸ்கிரிய மல்வத்து மகாநாயக்க தேரர்கள் உட்பட பல தரப்பினரும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

நேற்று குறித்த இடத்திற்கு விஜயம் செய்த முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா, போலி தலதா மாளிகையின் பத்திரிப்பு பகுதியை அகற்றுமாறு அதன் ஸ்தாபகர் ஜானக சேனாதிபதிக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading