World

மகனின் பிறந்த நாள் கொண்டாடத்தில் கூலிப்படையை ஏவி கணவனை சுட்டுக் கொன்ற மனைவி!

மகனின் பிறந்த நாளில் கூலிப்டையை ஏவி கணவரை சுட்டுக் கொன்ற பிரேசில் மாடல் அழகியை போலீசார் கைது செய்துள்ளனர். பிரேசில் நாட்டின் மாடல் அழகி கமிலா மரோடின் – அவரது கணவர் ரிகார்டோ மரோடின் தம்பதியின் 4 வயது மகனின் பிறந்த நாள் விழா கடந்த சில நாட்களுக்கு முன் கொண்டாடப்பட்டது. அப்போது திடீரென நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு வந்த 4 பேர் கும்பல், தாங்கள் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் ரிகார்டோ மரோடினை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பினர்.

அங்கு பாதுகாப்பில் இருந்த 2 போலீஸ்காரர்களையும் சுட்டுக் கொன்றனர். தகவலறிந்த போலீசார், ரிகார்டோ மரோடினின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் கர்னல்  பரோசோ கூறுகையில், ‘மாடல் அழகி கமிலா மரோடின் போதைப் பொருள் கடத்தல் கும்பலை ஏவி தனது கணவர் ரிகார்டோ மரோடினை சுட்டுக் கொன்றுள்ளார். ஆனால், தனக்கு ஒன்றும் தெரியாதது போல் நடித்தார். தொடர் விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

தனது கணவருடன் ஏற்பட்ட சண்டையால் அவரை ஆள்வைத்து கொன்றுள்ளார். தாயின் வீட்டிலிருந்து  திரும்பிக் கொண்டிருந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது தாயின் வீட்டில் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி  மீட்கப்பட்டது. மேலும் ஏராளமான பணம்  மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. ஐந்து சொகுசு கார்களையும், ஒரு பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆடம்பர வாழ்க்கை நடத்தி வந்த மாடல் அழகி கமிலா மரோடின், தாதாவாக மாறியுள்ளார். இவ்வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகிறோம்’ என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading