World

பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடத்தை பிடித்தது!

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது சீனா.

உலக அளவில் பணக்கார நாடுகள் குறித்து மெக்கின்சி நிறுவனமும், அதன் துணை நிறுவனங்களும் ஆய்வு நடத்தின. இந்த ஆய்வில், உலக வருவாயில் 60 சதவீதத்தைக் கொண்டுள்ள முதல் 10 நாடுகளின் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி சீனா 2020ம் ஆண்டில் 514 டிரில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது கடந்த 2000ம் ஆண்டில் 156 டிரில்லியன் டாலர்களாக இருந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரித்து அமெரிக்காவையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு உயந்துள்ளது.

சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும், மூன்றாம் இடத்தில் ஜெர்மனியும் உள்ளன. அடுத்தடுத்த இடங்களில் பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்வீடன் ஆகிய நாடுகள் உள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading