Local

திருமணமான மகனைக் கத்தியால் குத்திப் படுகொலைசெய்த தந்தை!

வென்னப்புவ, கடவத்தை பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக தந்தை, மகனை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய திருமணமான நபர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டால் தந்தையை மகன் தாக்கியுள்ளார் எனவும், இதனால் கோபமடைந்த தந்தை கத்தியால் மகனைக் குத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

படுகாயமடைந்த மகன் மாரவிரல வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போதே உயிரிழந்துள்ளார்.

இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தந்தையைக் கைதுசெய்த வென்னப்புவ பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading