Local

மக்களே ஆட்சியைத் தீர்மானிப்பர்! – மஹிந்த அணிக்கு மனோ பதிலடி

தேர்தலை நடத்தாமல் அரசை மாற்ற முடியாது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இந்த நாட்டை யார் ஆட்சி செய்வது, அரசை மாற்றுவது, யார் அரசியல்வாதிகள் என்பதைத் தீர்மானிப்பது, பொதுமக்களே ஆவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இரத்மலானையில் நேற்று நடைபெற்ற​ நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசை ஓரங்கட்டிவிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை இணைந்தது இடைக்கால அரசை அமைக்கும் முயற்சியில் மஹிந்த அணியினர் களமிறங்கியமைக்குப் பதிலடி வழங்கும் வகையிலேயே அமைச்சர் மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading