World

மகள் காதல் திருமணம் வீட்டில் இருந்தவர்களை தீ வைத்துக் கொன்ற தந்தை!


தனது மகள் தனது விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்துகொண்டதால் தனது இரண்டு புதல்விகளையும் அவர்களின் பிள்ளைகளையும் வீட்டுடன் எரித்து தந்தை கொலை செய்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் முசாபர்கர் மாவட்டத்தில்   இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது பெண்பிள்ளைகளின் வீட்டிற்கு தீவைத்த தந்தையை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பவுசியா பீபி குர்சிட் மாய் என்ற தனது பெண்பிள்ளைகளின் வீட்டிற்கே  தந்தை தீ வைத்துள்ளார்.

இதில் குர்சிட் மாயின் கணவரும் உயிரிழந்துள்ளார்.
பிபீ 18 மாதங்களிற்கு முன்னர் காதல் திருமணம் செய்துகொண்டார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நான் அந்தவேளை வீட்டில் இருக்கவில்லை வீட்டிற்கு திரும்பிவந்த வேளை வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை பார்த்தேன் என பிபீயின் கணவர் தெரிவித்துள்ளார்.

குர்சிட் மாயின் பிள்ளைகளுடன் தனது நான்கு மாத மகனும் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளான் என தந்தை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading