மகாத்மா காந்தியின் பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

மகாத்மா காந்தியின் பேத்தியும் தென்னாபிரிக்காவில் எம்பியும் ஆக இருந்த இலா காந்தியின் மகள் ஆஷிஷ் லதா ராம்கோபினுக்கு பண மோசடி வழக்கில் தென்னாபிரிக்க நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது
57 வயதான இவர் இந்தியாவிலிருந்து சரக்குகளை சுங்கவரி இல்லாமல் இறக்குமதி செய்து தருவதாகக் கூறி மகராஜ் என்ற தொழிலதிபருக்கு இந்திய மதிப்பில் சுமார் மூன்று கோடியே 33 லட்சம் பெற்று ஏமாற்றினார் என டர்பன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
கடந்த 2015 இல் தொடரப்பட்ட இந்த வழக்கில் அவருக்கு பிணை வழங்கப்பட்டாலும் இப்போது தீர்ப்பு வெளியாகி மேல்முறையீடு செய்ய முடியாது என்று நிபந்தனையுடன் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
