Local

மக்களுக்கு பேரிடி – மின்கட்டணம் அதிகரிக்கும் அபாயம்!!!

இலங்கை மின்சார சபையின் (Ceylon Electricity Board) கடன் தொகை மீண்டும் அதிகரித்துச் செல்லும் அபாயம் காணப்படுவதனால் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்குமாறு பரிந்துரை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பரிந்துரையை சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund) சிரேஸ்ட அதிகாரி பீட்டர் புவர் முன்வைத்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் இலங்கை மின்சாரசபை மின் கட்டணத்தில் திருத்தம் செய்திருந்தது.

இந்தநிலையில், குறித்த திருத்தத்தினால் மின் உற்பத்தி செலவுகள் கட்டணத்தினால் ஈடு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாக பீட்டர் புவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களுக்கு பேரிடி - மின்கட்டணம் அதிகரிக்கும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Imf Recommends Increasing Electricity Tariffs Sl

எதிர்காலத்தில் இலங்கை மின்சாரசபை நட்டமடையக் கூடிய சாத்தியங்கள் மிக அதிகம் என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக புதிய கட்டணங்களின் காரணமாக செலவுகளை ஈடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் இலங்கை மின்சார சபையின் கடன் தொகை மீண்டும் அதிகரித்துச் செல்லும் அபாயம் காணப்படுவதாகவும் அவ்வாறு கடன் அதிகரித்தால் இலங்கை மின்சாரசபை அரசாங்கத்திற்கு மீணடும் சுமையாக அமையக் கூடும் எனவும் பீட்டர் புவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே, மின்சார சபையின் செலவுகளை ஈடு செய்யக் கூடிய வகையில் மின்கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு பேரிடி - மின்கட்டணம் அதிகரிக்கும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Imf Recommends Increasing Electricity Tariffs Sl

நட்டம் அடையாத வகையில் விலை நிர்ணயம் செய்யக்கூடிய விலை பொறிமுறைமையொன்று காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இந்த முறையை பயன்படுத்தி விலை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பீட்டர் புவர் அறிவுருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading