Local

மங்களவின் மரணத்தை முன்கூட்டியே வெளியிட்ட பெண் பிக்கு!

இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று மரணமடைந்த நிலையில், அது தொடர்பில் எதிர்வுகூறலை வெளியிட்ட பெண் பௌத்த பிக்கு ஒருவரது காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்டி – பல்லேகலையிலுள்ள கோதமி விகாரையின் பிரதான பெண் பிக்குவாகிய கம்மட்டாச்சாரி கோதமீ தேரர் கடந்த ஜுலை மாதம் 03ஆம் திகதி சமூக வலைத்தளமொன்றில் நடத்தப்பட்ட நேர்காணலில் பங்கேற்றிருந்தார்.

இதன்போது, கருத்து வெளியிட்டிருந்த அவர், இலங்கையில் அனைவராலும் அறியப்பட்ட பிரபல அரசியல்வாதி மரணிக்கப்போகின்றார். அவர் அரசியலுக்கு ஆற்றிய சேவை மதிக்கத்தக்கது.

உலகமும் அவர்பற்றி பேசும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அவர் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவைப்பற்றியே ஆருடம் வெளியிட்டிருந்ததாக பலரும் கூறி வருகின்றனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading