Entertainment

மணமகனுக்கு 100 மணமகளுக்கு 96 நடைபெற்ற திருமணம் வியந்துபோன ஊர் மக்கள்!

ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை டி.ஜி. தோட்டை கிராமத்தில் வசிக்கும் முனியப்பா 100 வயதை கடந்தார்.

அவருடைய மனைவி குண்டம்மா என்கின்ற மாரம்மாவுக்கு 96 வயதாகிறது. ஆரோகியத்துடன் வாழ்ந்து வரும் இவர்களது நூற்றாண்டு விழாவை குடும்பத்தினர் கொண்டாடினர்.

தேன்கனிக்கோட்டை கதிலட்சுமி – நரசிம்மசுவாமி கோயிலில் இந்த தம்பதியினருக்கு புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க கெட்டிமேளம் கொட்டி மாலைகள் அணிவித்து வைரவிழா திருமணம் நடைபெற்றது.

100 வயதை கடந்த தம்பதியினரிடம் மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன், எள்ளுப்பேரன் என 4 தலைமுறையினர் மற்றும் ஊர்மக்கள் ஆசிபெற்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading