Local

மதுபானசாலைகள்   மூடப்பட்டதால்  சட்டவிரோத  மதுபான  ஆலைகள்  உருவாகின்றன!

மதுபானசாலைகள் மூடப்படுவதால் கிராமப் புறங்களில் தீங்கு விளைவிக்கும் மது ஆலைகள் அதிகளவில் அமைக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய கொரோனா தொற்றுச் சூழலால் சட்டவிரோத மதுபான ஆலைகளை பாதுகாப்பு படையினரால் சோதனை செய்ய முடியவில்லை.
மதுபானசாலைகளை மீண்டும் திறப்பதற்கான உத்தரவுக்குப் பொறுப்பான தனிநபர் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ​​ இது தொடர்பில் பதிலளிக்க முடியாது என்றும் அவர்
மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading