மதுபான நிலையங்களை மூடுவதால் அரசுக்கு நாளாந்தம் ஐந்து பில்லியன் நட்டமாம்!

மதுபான நிலையங்களைத் திறப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு நாளாந்தம் ஐந்து பில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கின்றது மூடுவதால் அரசுக்கு நட்டம் ஏற்படுகிறது என அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவல தெரிவித்துள்ளார்.
இன்றைய சூழ்நிலையில் அனைத்து அரசாங்கங்களும் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக அனைத்துக் கோணங்களிலும் சிந்திக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு யார் அனுமதி வழங்கியது என்ற கேள்விக்கு அவர் பதில் வழங்க மறுத்துள்ளார்.
இந்தக் கேள்வியை எழுப்புவது பயனற்ற விடயம், இவ்வாறான முடிவுகளை ஆணையாளரே தீர்மானிக் கின்றனர். மதுபான விற்பனை நிலையங்களைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களே அவற்றைப் பெறுவதற்கு முன்வரிசையில் நிற்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
