Local

மத்திய வங்கி ஆளுனராக மீண்டும் அஜித் நிவாட் கப்ரால்?

இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் பதவியில் மீளவும் அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

அஜித் நிவாட் கப்ரால் மூலதனச் சந்தை மற்றும் அரச முயற்சியான்மை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக கடமையாற்றி வருகின்றார்.

இந்த பதவியை இராஜினாமா செய்து மீளவும் மத்திய வங்கியின் ஆளுனராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது மத்திய வங்கியின் ஆளுனராக கடமையாற்றி வரும் டபிள்யூ.டி.லக்ஸ்மன் சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பதவியொன்றுக்கு நியமிக்கப்பட உள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுனராக நியமிக்கப்பட உள்ள விவகாரம் குறித்து தெற்கு ஆங்கில ஊடகமொன்று அஜித் நிவாட் கப்ராலிடம் வினவிய போது அதனை ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading