மனித பரிணாமத்தில் திருப்பம்!
சீனாவின் தெற்குப் பகுதியில் 3.24 லட்சம் ஆண்டுகள் பழமையான மனித மூதாதையர்களின் புதைபடிவங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். Guangxi மாகாணத்தின் Chongzuo நகரத்திற்கு அருகிலுள்ள Baxian மற்றும் Naxian என்ற இரண்டு குகைகளில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் மொத்தம் 9 பழங்கால மனிதப் பற்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் 8 பற்கள் அழிந்துபோன Homo erectus மனித இனத்தைச் சேர்ந்தவை என ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
Baxian குகையில் கிடைத்த புதைபடிவங்கள் சுமார் 3.24 லட்சம் முதல் 1.84 லட்சம் ஆண்டுகள் பழமையானவை என்றும், Naxian குகையில் கிடைத்தவை 3.19 லட்சம் முதல் 2.41 லட்சம் ஆண்டுகள் பழமையானவை என்றும் ஐந்து வெவ்வேறு Dating முறைகள் மூலம் கணிக்கப்பட்டுள்ளன. Homo erectus மனித இனம் சுமார் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே சீனாவின் பிரதான நிலப்பரப்பிலிருந்து மறைந்துவிட்டதாக முந்தைய ஆதாரங்கள் சுட்டிக்காட்டிய நிலையில், இந்தப் புதிய கண்டுபிடிப்பு அவர்கள் அதற்குப் பிறகும் அங்கு வாழ்ந்திருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. மேலும், அந்தக் குகைகளில் யானைகள், காண்டாமிருகங்கள், குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளின் 18,000-க்கும் அதிகமான புதைபடிவங்களும் கிடைத்துள்ளன. இதன் மூலம் Homo erectus மனிதர்கள் திறந்த புல்வெளிகளில் மட்டுமல்லாமல், அடர்ந்த வெப்பமண்டல மழைக்காடுகளிலும் வாழ்ந்திருக்கலாம் என்ற புதிய ஆதாரம் கிடைத்துள்ளது. இந்த ஆய்வு நவம்பர் 18, 2026 அன்று Nature அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டது.

You must be logged in to post a comment.