Features

புதன் கிரகத்தில் மறைந்திருக்கும் மர்மம்! ஆய்வில் அதிர்ச்சி!!

எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 10 பில்லியன் கிலோமீற்றர் தூரம் பயணித்துள்ள BepiColombo விண்கலம், புதன் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நுழையத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ESA) மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) ஆகியன இணைந்து முன்னெடுக்கும் இந்தத் திட்டம், 2018ஆம் ஆண்டு பிரெஞ்சு கயானாவிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.

சூரியனுக்கு மிக அருகிலுள்ள புதன் கிரகத்தின் தோற்றம், உட்புறக் கட்டமைப்பு, காந்தப்புலம் மற்றும் அதன் மேற்பரப்பில் காணப்படும் மர்மமான பள்ளங்கள் குறித்து ஆராய்வதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

குறிப்பாக, கடுமையான வெப்பநிலை நிலவும் புதன் கிரகத்தின் துருவப் பகுதிகளில் உள்ள பள்ளங்களில் பனிக்கட்டி காணப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தப் பயணத்தின்போது விண்கலம் பூமியை ஒருமுறையும், வெள்ளி கிரகத்தை இருமுறையும், புதன் கிரகத்தை ஆறுமுறையும் கடந்து சென்றுள்ளது. சூரியனின் ஈர்ப்பு விசையைக் கட்டுப்படுத்தி விண்கலத்தின் வேகத்தைச் சீரமைப்பதற்காக இந்தச் சிக்கலான பயணப் பாதை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாக, ஐரோப்பா மற்றும் ஜப்பானுக்குச் சொந்தமான இரண்டு ஆய்வு விண்கலங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இவை டிசம்பர் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் பிரிக்கப்பட்டு, 2027 ஏப்ரல் மாதத்தில் முக்கிய ஆய்வுகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் அமெரிக்காவின் நாசா நிறுவனத்துக்குச் சொந்தமான Mariner 10 மற்றும் MESSENGER ஆகிய இரண்டு விண்கலங்கள் மாத்திரமே புதன் கிரகத்தைச் சென்றடைந்துள்ளன.

இந்தநிலையில், BepiColombo திட்டத்தின் ஊடாக புதன் கிரகத்தின் தோற்றம் மற்றும் சூரியக் குடும்பத்தின் வரலாறு தொடர்பான புதிய தகவல்களை அறிந்துகொள்ள முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading