Uncategorized

மனித மூளையில் சிப் வைக்கும் முயற்சியில் எலான் மாஸ்க்!

அமெரிக்கா எலான் மஸ்கின் நியூரோ லிங்க் நிறுவனத்திற்கு உரிமம் தர மறுத்துள்ளது.

அமெரிக்க உணவு மற்றும் மருத்துத்துறை நிர்வாகமே இவ்வாறு மறுப்பு தெரிவித்துள்ளது.

டுவிட்டர் மற்றும் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் கடந்த 2016ஆம் ஆண்டு நியூரோலிங்க் எனும் மருத்துவத்துறை சார்ந்த நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.

நியூரோ லிங்க் என்பது மனித மூலையில் ஒரு சிறிய வகை சிப் போன்ற கருவியை வைத்து அதனை மூலமாக நரம்பியல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தப்படும் ஒருவகை மருத்துவம் ஆகும். இதனை அமெரிக்க உணவு மற்றும் மருத்துத்துறை நிர்வாகம் புறக்கணித்துள்ளது.

மேலும் கை கால் ஊனமுற்றவர்களும், பார்வை திறன் குறைபாடுள்ளவரக்ளும் விரைவில் குணமடையவைக்கும் ஆற்றல் நியூரோலிங்க்கிற்கு உள்ளதாக மஸ்க்  தெரிவித்தார்.

ஆனால் அமெரிக்க உணவு மற்றும் மருத்துத்துறை நிர்வாகம் இதனை முறையாக சோதிக்காமல் மனிதர்களிடம் உபயோகிக்கக்கூடாது என்றும்,அவ்வாறு செய்தாலும் மனித மூளையை அது எவ்வாறு சேதப்படுத்தாமல் இருக்கமுடியும் எனவும் கேள்வியெழுப்பி அதன் உரிமத்தை நிராகரித்தது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading