LocalWorld

மனித மூளையை உண்ணும் நோய் கண்டுபிடிப்பு ஒருவர் உயிரிழப்பு!

தென் கொரியாவில் மூளையை உண்ணும் அமீபாவால் முதல் நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெக்லேரியா ஃபோலேரி நோய்த்தொற்று பொதுவாக ‘மூளையை உண்ணும் அமீபா என்று குறிப்பிடப்படுகின்றது.

முதல் முறையாக இந்த நோய்க்கு  இறப்பு குறித்து பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

நோயினால் பாதிக்கப்பட்ட 50 வயதான அந்த நபர் தாய்லாந்தில் இருந்து திரும்பிய பிறகு, அரிதான இந்த நோய்க்கான அறிகுறிகள் தோன்றிய 10 நாட்கள் கழித்து, உயிரிழந்துள்ளதாக கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் (KDCA) உறுதிப்படுத்தியது.

இந்த நெக்லேரியா ஃபோலேரி எனும் அமீபாக்கள் நன்னீர் ஏரிகள் மற்றும் ஆறுகள், குளங்களில் காணப்படுவதாக கூறப்படுகிறது. இந்த அமீபா மனிதனின் மூக்கு வழியாக மூளைக்குள் சென்று மூளை திசுக்களை பாதிப்படையச்செய்கிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading