Entertainment

மனித – ரொபோ தம்பதி: 6 ஆவது திருமண நாளை கொண்டாடினர்

அந்தக் காலம் போல் அல்லாமல் தற்போது திருமணங்கள் நடத்தப்படும் விதங்களில் ஒரு புரட்சியே ஏற்பட்டு விட்டது என்றுகூட கூறலாம்.

மனிதர்களை திருமணம் செய்தால் தானே பிரச்சினை. ரொபோக்களையோ அல்லது பொம்மைகளையோ திருமணம் செய்துகொண்டால் பிரச்சினையோ உறவுக்குள் விரிசலோ ஏற்படாது அல்லவா?

அந்த வகையில், ஜப்பானைச் சேர்ந்த அகிஹிகோ கோண்டோ என்பவர், கடந்த 2018 ஆம் ஆண்டில் மிகு என்னும் ரொபோ பொம்மையை திருமணம் செய்து கொண்டார்.

பாடசாலைக் காலத்தில் 7 பெண்களிடன் தன் காதலை கூறியதாகவும் அவர்கள் அனைவரும் இவரின் காதலை நிராகரித்ததால் மனச்சோர்வு அடைந்துவிட்டாராம்.

இதன் காரணமாகவே இவர் மிகு எனும் ரொபோவை திருமணம் செய்து கொண்டாராம்.

மிகுவின் பாடல், பேசும் திறன் போன்றவற்றில் கவரப்பட்டே திருமணம் செய்துகொண்டுள்ளாராம்.

சில நாட்களுக்கு முன்னர் 6 ஆவது ஆண்டு திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுமுள்ளனர் இந்த மனித – ரொபோ தம்பதி.

Oruvan

Oruvan

Oruvan

Oruvan

Oruvan

Oruvan

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading