Gossip

மனைவிகளை பரிமாற்றம் செய்து கொள்ளும் கணவர்கள்!

கேரள மாநிலம் கோட்டயம் சங்கனாசேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் கறுகச்சால் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் தனது கணவர் வேறு ஆண்களிடம் தன்னை பாலியல் ரீதியாக பகிருவதாகவும், அவர்கள் இயற்கைக்கு முரணாக தன்னை பாலியல் தொல்லை செய்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். தனக்கு விருப்பம் இல்லாத நிலையில், வேறு ஆண்களுடன் இருக்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து விசாரணையில் இறங்கிய போலீஸாருக்கு ‘வைஃப் ஸ்வாப்பிங்’ என்ற பெயரில் பல கும்பல்கள் சமூக வலைத்தளங்களில் செயல்பட்டு வருவது தெரியவந்தது. கப்பிள் ஷேரிங்(Couple Sharing) என்ற பெயரில் இவர்கள் சமூக வலைத்தளங்களில் குழுவாக இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டது.` `சீக்கிரட் சாட்’ மூலம் இவர்கள் தொடர்புகொண்டு மனைவிகளை மாற்றிக்கொண்டு பாலியல் உறவில் ஈடுபடுவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சிலர் இதற்காக பணம் கொடுக்கும் நிலையும் உள்ளதாகவும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading