World

மனைவியின் அடி தாங்க முடியல கண்ணீருடன் புகார் கொடுத்த கணவன்!

மனைவியின் கொடுமை தாங்க முடியவில்லை, எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள் எனக் கூறி கணவர் ஒருவர் போலீசில் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக, கணவன் கொடுமையை தாங்க முடியவில்லை, மாமியார் கொடுமைப்படுத்துகிறார், வரதட்சணை கேட்டு தொல்லை கொடுக்கிறார்கள் என திருமணமான பெண்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுப்பது வாடிக்கையான ஒன்றாக நமது நாட்டில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், மனைவியின் தொல்லை தாங்க முடியவில்லை எனக் கூறி கணவர் ஒருவர் போலீஸில் புகார் அளித்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
வலித்பூரில் உள்ள படையாபுராவைச் சேர்ந்த பிரிஜேஷ் குமார் என்பவர் தனது மனைவி மீது போலீஸில் புகார் அளித்துள்ளார்.

பின்னர், காவல்நிலையத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :-எனது மனைவி தினமும் என்னிடம் சண்டை போடுகிறார். என் மீது கோபம் வந்தால் போலீஸில் புகார் அளித்து விடுகிறாள். இதனால், 15 முறை என்னை போலீசார் கைது செய்து விட்டனர். என்னிடம் சண்டை போட்டு பணத்தை எல்லாம் பிடுங்கி விடுவாள். என்‌ மனைவியால்‌ நான்‌ படும்‌ பாடுகளை என்னால்‌ தாங்க முடியவில்லை. இன்றும்‌ அவள்‌ என்னை அடித்து கடித்து விட்டாள்‌.

நான்‌ எஸ்பியை சந்திக்க வந்தேன்‌. இங்கு எனக்கு நீதி கிடைக்காவிட்டால்‌ நான்‌ இதே இடத்தில்‌ தற்கொலை செய்து கொள்வேன்‌, எனக் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading