Entertainment

மனைவியின் தொல்லையால் பனைமரத்தில் வாழும் கணவன்!

உத்தரப் பிரதேசத்தின் கோபகஞ்ச் என்ற இடத்தைச் சேர்ந்த 42 வயதாகும் ராம் பிரவேஷ். தன் மனைவி தொடர்ச்சியாகச் சண்டை இட்டு கொண்டு இருப்பதாகவும் எப்போதும் வாய்த் தகராறு இருந்து கொண்டே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு சில நேரங்களில் அவர் தன்னை அடிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் வாழ்க்கையை வெறுத்த ராம் தனது மனைவியால் வரமுடியாத இடத்திற்குச் செல்ல முடிவு செய்து அதே கிராமத்தில் உள்ள பனை மரம் ஒன்றின் மீது ஏறி அமர்ந்து கொண்டதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஒரு மாதமாக ராம் பிரவேஷ் பனை மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு வாழ்ந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

இதனால் ராமிற்குத் தேவையான உணவை அவரது உறவினர்கள் கயிற்றில் கட்டி மேலே அனுப்பி வைப்பதுடன் அவர் அதனை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டே வாழ்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading