Uncategorized

மனைவியை கொலை செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்த கணவன்!

ஹொங்கொங் மோடல் அழகி அபி சோய்-ன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த அவரது முன்னாள் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொங்காங் மோடல் அழகி அபி சோய்-இன் உடல் உறுப்புகள் அவரது முன்னாள் மாமனார் வீட்டில் குளிர்சாதன பெட்டியில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவரது முன்னாள் கணவர் அலெக்ஸ் குவாங்-சியை பொலிஸார் கைது செய்தனர்.

அவர் காணாமல் போனதாக கடந்த இரண்டு தினங்களாக தேடப்பட்டு வந்தார். பின்னர்பொலிஸாரிடம்  புகாரளிக்கப்பட்ட நிலையில் அபி சோய்யை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தேடலில் ஒரு பகுதியாக சோயின் முன்னாள் மாமனார் வாடகைக்கு இருந்த வீட்டை சோதனை செய்ததில் குளிர்சாதனப் பெட்டியில் அவரது இரு கால்களை கண்டுபிடித்தனர்.

மேலும் சோதனை செய்த பொலிஸார் வீட்டில் தயாரிக்கப்பட்ட சூப்பில் (சூப் பானை) கை விரல்கள் உள்ளிட்ட உடல் பாகங்களை கண்டுபிடித்தனர்.

இது தொடர்பாக அவரது மாமனார் உட்பட மூன்று பேரை கொலை சந்தேகத்தின் பேரில் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் தேடப்பட்டு வந்த சோயின் முன்னாள் கணவர் அலெக்ஸ் குவாங்-சியை கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அபி சோய்யின் சொத்துக்காக அலெக்ஸ், அவரை குடும்பத்தினரோடு சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் நேற்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஹாங்காங் முழுவதும் பதற்றத்தையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading