World

மனைவி வேறொரு ஆணுடன் முத்தமிடுவதை கண்ட பொலிஸ் கணவன் பின்னர் நடந்த விபரீதம்!

கனேடிய தலைநகரில், தன் மனைவியை வேறொருவர் முத்தமிடுவதைக் கண்ட பொலிசார் ஒருவர், உலோகக் கம்பி ஒன்றை எடுத்து அந்த ஜோடி இருந்த ட்ரக்கை அடித்து நொறுக்கினார்.

Ottawa பொலிஸ் துறையில் பணியாற்றும் கான்ஸ்டபிள் Ken Bruce, சமீப காலமாக தன் மனைவி கொஞ்சம் வித்தியாசமாக நடந்துகொள்வதை கவனித்துள்ளார்.

அவருக்கு காயம் ஏற்பட்டிருந்ததால், அவர் முழுமையாக குணமடையும் வரை அவருக்கு எளிமையான வேலைகளே கொடுக்கப்பட்டிருந்தன.

ஒரு நாள் அவர் வீட்டிலிருக்கும்போது அவருடைய மனைவி ஷாப்பிங் செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றிருக்கிறார். ஏற்கனவே மனைவி மீது சந்தேகம் இருந்ததால் அவரது காரை ட்ராக் செய்ய ஆப் ஒன்றை பயன்படுத்தியுள்ளார் Bruce.

அப்போது ஷாப்பிங்குக்கு சம்பந்தமே இல்லாத ஓரிடத்தில் தன் மனைவியின் கார் நிறுத்தப்பட்டிருப்பதை அறிந்துகொண்ட Bruce, மனைவியை மொபைலில் அழைக்க, இரண்டு முறை அழைத்தும் அந்த பெண் அழைப்பை ஏற்கவில்லையாம்.

ஆகவே, தனது காரை எடுத்துக்கொண்டு மனைவியின் கார் இருந்த இடத்துக்கு சென்றுள்ளார் Bruce.

அங்கே தனது மனைவியின் கார் ஒரு ட்ரக்கின் அருகே நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டுள்ளார் அவர். அந்த டரக்குக்குள் தன் மனைவியும் மற்றொருவரும் கட்டியணைத்து முத்தமிட்டுக்கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறார் Bruce.

உடனே ஆத்திரமடைந்த Bruce, தன் வாகனத்திலிருந்து உலோகக் கம்பி ஒன்றை எடுத்து அந்த நபரின் ட்ரக்கின் கண்ணாடிகள் மற்றும் விளக்குகளை அடித்து நொறுக்கியிருக்கிறார். ஆனாலும், தன் மனைவியையோ அந்த நபரையோ அவர் தாக்கவில்லை.

பின்னர் தனது மேலதிகாரியிடம் நடந்ததை தெரிவித்துள்ளார் அவர்.  

தனது ட்ரக் அடித்து நொறுக்கப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட நபர் புகாரளிக்காததால் Bruce மீது எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. 

என்றாலும், அவர் தானே தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதாக உறுதிமொழி எடுத்துக்கொண்ட ஒரு பொலிசாரே தவறு செய்யக்கூடாது என்பதை நினைவூட்டுவதற்காகவும், மற்ற பொலிசாருக்கு முன்னுதாரணமாக இருப்பதற்காகவும் Bruceஐ 10 நாட்கள் பணியிடை நீக்கம் செய்ய அவரது மேலதிகாரிகள் கோரியுள்ளார்கள்.

அடுத்த மாதம் அவருக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading