CinemaWorld

மன்னர் சால்ஸ்ஸின் முடிசூட்டு விழாவிற்கு அழைக்கப்பட்ட ஒரே ஒரு இந்திய நடிகை!

பிரித்தானிய மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவிற்கு அழைக்கப்பட்டுள்ள விருந்தினர்களில் இந்திய நடிகை ஒருவரும் உள்ளார்.

மன்னருடைய முடிசூட்டுவிழாவில் கலந்துகொள்ளும் பிரபலங்கள்
மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவில் கலந்துகொள்ள பல நாட்டு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பல நாடுகளின் தலைவர்கள், வெளிநாட்டு ராஜ குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் துணை ஜனாதிபதியான Jagdeep Dhankharக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவிற்கு அழைக்கப்பட்டுள்ள ஒரே இந்திய நடிகை | Sonam Kapoor King Charles Coronation

முடிசூட்டுவிழாவிற்கு அழைக்கப்பட்டுள்ள ஒரே இந்திய நடிகை

இந்நிலையில், மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவிற்கு இந்திய நடிகையும், நடிகர் அனில் கபூரின் மகளுமான சோனம் கபூருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விடயம் என்னவென்றால், சோனம் நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்க இருக்கிறார்.

அதாவது, வெளிநாடுகளில், நிகழ்ச்சிகளில் spoken word performance என்றொரு விடயம் உண்டு. அது கவிதை அல்லது சுவையான சிற்றுரை ஒன்றை ஆற்றும் விடயமாகும்.

சோனம், மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவில், காணொளி வாயிலாக நடைபெறும் காமன்வெல்த் இசைக்குழுவினரை அறிமுகப்படுத்தும் வகையில் சிற்றுரை ஒன்றை ஆற்ற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading