Local

மரண வீட்டிற்கு சென்று வீடு திரும்பிய பெண் கீழே விழுந்து மரணம்!

மஹதோவ லோவர் டிவிஷன் பகுதியில் சுகயீனமுற்ற நிலையில் மரணித்த பெண்ணொருவரின் மரண வீட்டுக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த பசறை 13 ஆம் கட்டையை சேர்ந்த க. லட்சுமி என்ற 76 வயதுடைய பெண்மணி வீதியில் கீழே தடுக்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஊர் மக்களினால் மடூல்சீமை பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து உடன் ஸ்தானத்துற்கு விரைந்த மடுல்சீமை பொலிஸார் 1990 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் வழங்கி வரவழைக்கப்பட்ட தோடு பசறை பொது வைத்தியசாலைக்கு பெண்மணியின் பிரேதம் கொண்டு செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மடூல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading