Local

மரம் உடைந்து பாரவூர்தி மீது வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

மாத்தளை – மஹவெல – மடவலவுல்பன – ஹதமுனகல பிரதேசத்தில் மரம் ஒன்று உடைந்து பாரவூர்தி மீது வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது மின் கம்பியும் மரத்துடன் இணைந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் மூவர் பாரவூர்தியில் பயணித்துள்ள நிலையில் ஒரு இளைஞர் பாரவூர்த்தியில் இருந்து குதித்து தப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading