World

மர்ம காய்ச்சலால் 60 குழந்தைகள் உயிரிழப்பு!

உத்தரப் பிரதேசத்தில் பிரோசாபாத் நகரில் மர்ம காய்ச்சலால் பலர் பலியாகி வருகின்றனர். இதில் அதிகம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த மர்ம காய்ச்சலின் அறிகுறியும் டெங்குவின் அறிகுறியும் ஒன்றாக இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த மர்ம காய்ச்சலுக்கும், கொரோனாவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் பரவி வரும் மர்ம காய்ச்சல் காரணமாக 60ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குழந்தைகளை அதிகம் தாக்குவதால் சுகாதார நிபுணர் குழுவை அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.இதனிடையே டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவுவதைத் தொடர்ந்து ஆக்ரா, மெயின்புரி உள்ளிட்ட பகுதிகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் ஃபிரோசாபாத்தில் உள்ள பள்ளிகள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading