LocalSports

மறைந்த கிரிக்கெட் வீரருக்கு இலங்கை இந்திய அணிகள் மெளன அஞ்சலி!

மாரடைப்பால் நேற்று (04) மறைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் ஷேன் வோர்னுக்கு மொஹலியில் இந்திய, இலங்கை வீரர்கள் மெளன அஞ்சலி செலுத்தினார்கள்.

அவுஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்கியவர் ஷேன் வோர்ன். இந்நிலையில் நண்பர்களுடன் தாய்லாந்து சென்ற வோர்ன், எதிர்பாராதவிதமாக மாரடைப்பு ஏற்பட்டு நேற்று காலமானார்.

தாய்லாந்தில் உள்ள சுற்றுலா தீவுகளில் ஒன்றான கோ சாமுயில் உள்ள அவரது பங்களாவில் வோர்ன் சுயநினைவின்றி மீட்கப்பட்டதாகவும், மருத்துவா்களின் சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்ததாகவும் வோர்ன் தரப்பு நிா்வாகத்தின் சாா்பில் அறிக்கை அளிக்கப்பட்டது. வோர்னின் திடீர் மறைவு கிரிக்கெட் உலகையும் ரசிகர்களையும் அதிர்ச்சியடைச் செய்தது. கிரிக்கெட் பிரபலங்களும் ரசிகர்களும் வோர்ன் குறித்த தங்கள் நினைவுகளைச் சமூகவலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று கிரிக்கெட் ஆட்டம் நடைபெறும் அனைத்து இடங்களிலும் ஷேன் வோர்னின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. மொஹலியில் நடைபெறும் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டின் 2ஆவது நாளில் ஆட்டம் தொடங்கும் முன்பு இரு அணி வீரர்களும் ஆஸி. முன்னாள் வீரர்கள் ராட் மார்ஷ், வோர்ன் ஆகியோரின் மறைவுக்கு ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் அனைத்து வீரர்களும் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading